பண்ணிசைப் பேரறிஞர் திரு.முத்துக்கந்தசாமி ஓதுவார் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறையில் கௌரவம் அளிக்கப்பட்டது.🌷🌷🌷
20-4-2018 அன்று யாழ் பல்கலைக்கழக இசைத்துறையில் இடம்பெற்ற பண்ணிசைப் பயிற்ச்சிப்பட்டறையில் கலைமாமணி,திருமுறைக்கலாநிதி,பண்ணிசைப்பேரறிஞர், திருப்பனந்தாள் முத்துக்கந்தசாமி ஓதுவார் ,அவரது மாணவர், திருமுறைக்கலாநிதி வயலூர், திரு.பாலச்சந்திரஓதுவார் (தேவார உதவிப்பேராசிரியர் அண்ணாமலைப்பல்கலைக்கழகம்)ஆகியோரின், "பண்ணிசை மரபு" என்ற தலைப்பிலான பயிற்சிப்பட்டறையும்,பண்ணிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.நிகழ்ச்சிக்கு உறுதுணையாக, முனைவர் நா.கிரீஷ்குமார் (உதவிப் பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) அவர்கள் புல்லாங்குழல், E.P.K.சுப்ரமணியன் (உதவிப்பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் )அவர்கள் மிருதங்கம் இசைத்தனர்.
நிகழ்வில், சங்கீத அக்கடமியால் சமீபத்தில் "பண்ணிசைப் பேரறிஞர்"என்ற விருது வழங்கப்பட்ட முதல் ஓதுவார் திரு.முத்துக்கந்தசாமி ஓதுவார். என்பதை நினைவு கூர்ந்து அவரை பாராட்டும் வகையில் துறைத்தலைவர்,திருமதி கிருபாசக்தி கருணா அவர்கள் பல்கலைக்கழகம் சார்பில் திரு.முத்துக்கந்தசாமி ஓதுவார் அவர்களுக்கு சான்றிதழ் அளித்து கௌரவித்து மகிழ்ந்தார்கள்.
நிகழ்வில் இலங்கையின் மூத்த பண்ணிசைக்கலைஞர்களான, திரு.சிவஞானசேகரன் அவர்களும் , யாழ் பல்கலைக்கழக இசைத்துறையின் முன்னாள் துறைத்தலைவர் முனைவர் ந.வி.மு.நவரெட்ணம் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி நிகழ்வினை மேலும் சிறப்பித்தார்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியர்களும்,மாணவர்களும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள். பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட பேராசிரியர்களுக்கு திரு.முத்துக்கந்தசாமி ஓதுவார் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார். பண்ணிசைக்கென்று உலகிலேயே இளங்கலைப் பட்டப்படிப்பு(B.F.A) உள்ள ஒரே பல்கலைக்கழகம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகும். பண்ணிசைப் பேரறிஞர் விருது பெற்ற முதல் ஓதுவாருக்கு இங்கு முதலில் கௌரவம் அளித்தமை முக்கிய சிறப்பம்சமாகும்.
சனி, 21 ஏப்ரல், 2018
பண்ணிசைப் பேரறிஞர் திரு.முத்துக்கந்தசாமி ஓதுவார் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறையில் கௌரவம் அளிக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக