செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

தேவாரப்பண்கள்

                                               பண்கள்

தென்னக இசையில் ராகங்கள் என அழைக்கப்படும் இனிய இசைக்கோர்வைகளையே பழந்தமிழிசையில் பண்கள் என அழைக்கப்பட்டன. சிலப்பதிகாரத்தில் நூற்றிமூன்று பண்கள் வழக்கிலிருந்ததாக குறிப்புகள் காண ப்படுகின்றன. 

பண்களில் பாடப்பெற்ற ஏராளமான பழந்தமிழ்ப் பாடல்களில் இன்றளவும் பழைய பாடுமுறை மாறாமல் இசைக்கப்படும் பாடல்கள் தேவாரங்கள் மட்டுமேயாகும். முதலில் கிடைக்கும் பண்ணிசை வடிவம்  6ம்  நூற்றாண்டைச் சேர்ந்த காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகங்கள் ஆகும்.  பண்களை அடிப்படையாக கொண்ட இசை என்பதால் ’பண்ணிசை என்று ’ அழைக்கப்படுகிறது.

தேவாரப்பண்கள்

பக்தி உணர்வு பொங்கி நாடெங்கும் எழுச்சி பெற்ற பல்லவர் காலப்பகுதியில் தமிழ் நாட்டுக்கோயில்கள் தோறும் சென்று இனிமைமிகு பண்களில் தேவாரப்பதிகங்களைப்பாடிய நாயன்மார்கள் இசையோடு பக்தி நெறிபுகட்டினார்கள்.  சங்ககால  தமிழிசை  மரபினை மீட்டெடுத்தனர்.
திருஞான சம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரமூர்த்தி நாயனார்,ஆகிய சைவ நாயன்மார் மூவரும் இறைவனை வாழ்த்தி பண்ணோடு பாடிய வாரப்பாடல்களே தேவரங்கள் ஆகும்.
மூவரும் தமது தேவாரப்பாடல்களில் பண்பற்றிய குறிப்புகளை ஏராளமாக தந்துள்ளனர்.உதாரணமாக
‘பண்ணோடு இசை பாடிய பத்தும்”என்று சம்பந்தப்பெருமானும்,
 “பண்னுடை பாடலோடும் பரமா நீ ஆடுமாறே”என்று அப்பர் பெருமானும்,
"பண்ணார் இசைகளது கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்” என்று சுந்தரர் பெருமானும்  தமது பாடல்களில் பண்ணிசையின் சிறப்பினை உணர்த்தியுள்ளனர்.

இவர்கள்பாடிய ஏராளமான பாடல்கள் பிற்காலத்தில் இராஜராஜ சோழ மன்னனின் பெரு முயற்சியோடு ,   திரு நாரையூர் பொள்ளாப்பிள்ளையார் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியின் துணையால்  விநாயகப்பெருமானின் அருள்வாக்கின்படி   சிதம்பரத்தில் கண்டெடுக்கப்பட்டது.இறைவனின் ஆணைப்படி பாணர்மரபில் வந்த பெண் ஒருவரால் பண்வகுக்கப்பட்டது.
எனும் வரலாறு திருமுறை கண்ட புராணத்தில் காணப்படுகிறது.
பண்கள் வகுத்துப்பாடப்பெறும் தேவாரப்பாடல்கள் ‘பண்ணாங்கப்பாடல்கள்;என அழைக்கப்படும்.

மூவர் பாடிய தேவாரப்பதிகங்களில் காணப்படும்  பண்கள்

1.செவ்வழி
2.தக்கராகம்
3.புறநீர்மை
4.பஞ்சமம்
5. நட்டபாடை
6.அந்தாளிக்குறிஞ்சி
7.காந்தாரம்
8.பழம்பஞ்சுரம்
9.மேகராகக்குறிஞ்சி
10.கொல்லிக்கௌவானம்
11.பழந்தக்கராகம்
12.குறிஞ்சி
13. நட்டராகம்
14.வியாழக்குறிஞ்சி
15.செந்துருத்தி
16.தக்கேசி
17.கொல்லி
18.காந்தாரப்பஞ்சமம்
19.இந்தளம்.
20.கௌசிகம்
21.பியந்தைக்காந்தாரம்.
22.சீகாமரம்
23.சாதாரி
24.யாழ்முரீ

என்பவையாகும். இவற்றுள் யாழ்முரீ என்பது பண் என்றும் ,ஒரு வகையான இசை முறையென்றும் இரு கருத்துக்கள் உள்ளன


தமிழிசை   13ம் நூற்றாண்டில் பிறமொழிக் கலப்பினால் சில மாற்றங்களுக்கு   உட்பட்டு “கர்நாடக இசை “ என பெயர் மாற்றம் பெற்றது.     இதனால் தமிழ்ப்  .பண்களின் பெயர்கள் யாவும் வடமொழியில் பெயர்மாற்றம் பெற்றன.அதன் பின்னரே  பண்களை  இராகங்கள் என அழைக்கப்படும் வழக்கம் ஏற்பட்டது.  திருமுறை இசைக்கும் ஓதுவார் மரபினரே தமிழிசையை  மாற்றங்களுக்கு உட்படுத்தாமல்    சோழர் காலம் முதல்   பாதுகாத்து வந்தனர் .  கர்நாடக சங்கீதம் தோன்றிய பின் தமிழிசையை பண்ணிசை என அழைக்கப்படும் மரபு ஏற்பட்டது.  
 
தமிழிசைச் சங்கம்

தொன்மையான தமிழிசை மரபிற்கு 20 ம் நூற்றாண்டில் குறைவு ஏற்பட்டது.  இசை அரங்குகளில் தமிழ்மொழிப்பாடல்கள் புறந்தள்ளப்பட்டு பிறமொழிப்பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்நிலையை போக்குவதற்கு 
அண்ணாமலைச்செட்டியாரால் தமிழிசையை போற்றிப்பாதுகாப்பதற்காக 1940ம் ஆண்டு தமிழிசைச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் ஓதுவார் பெருமக்களையும் இசை விற்பன்னர்களையும் அழைத்து பண்ணாராய்ச்சி மாநாடுகளை நடாத்தினார். பண்களின் தற்கால பெயர்களை கண்டறிந்து ஆண்டுதோறும் பண்ணாராய்ச்சி  முடிவுகள் அறிக்கைகளில்  வெளியிடப்பட்டது. அவற்றின் விபரங்கள் வருமாறு

பண்களின் பெயர்கள்                          அவற்றின் தற்காலப்பெயர்கள்

1.செவ்வழி    -                யதுகுலகாம்போதி23

2.தக்கராகம்       -                     காம்போதி

3.புறநீர்மை            -                     பூபாளம்.21

4.பஞ்சமம்                 -                 ஆகிரி20

5. நட்டபாடை                -        கம்பீரநாட்டை19

6.அந்தாளிக்குறிஞ்சி    -          சாமா18

7.காந்தாரம்        -                          நவரோசு

8.பழம்பஞ்சுரம்          -         சங்கராபரணம்16

9.மேகராகக்குறிஞ்சி      -            நீலாம்பரி15

10.கொல்லிக்கௌவானம்      -   நவரோஜ்

11.பழந்தக்கராகம்          -       ஆரபி14

12.குறிஞ்சி            -          ஹரிக்காம்போஜி13

13. நட்டராகம்           -                  பந்துவராளி

14.வியாழக்குறிஞ்சி      -   சௌராஷ்டிரம்11

15.செந்துருத்தி              -       மத்தியமாவதி10

16.தக்கேசி                     -              காம்போதி9

17.கொல்லி                      -         நவரோஜ்

18.காந்தாரப்பஞ்சமம்   -கேதாரகௌளை7

19.இந்தளம்.        -  மாயாமாளவகௌளை6

20.கௌசிகம்                            -    பைரவி5

21.பியந்தைக்காந்தாரம்.-            நவரோஜ்4

22.சீகாமரம்                 -  நாதநாமக்கிரியை3

23.சாதாரி                      - பந்துவராளி2

24.யாழ்முரீ                -  அடாணா




இவ்வாறு தேவாரப்பண்களின் தற்கால இராகப்பெயர்கள் கண்டறியப்பட்டன.இம்முடிவுகளில் சில வேறுபாடுகள் உள்ளதாக தமிழிசை ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுகின்றனர். உதாரணமாக யாழ்முரீீப் பண் என்பது நீலாம்பரி இராகம் என முடிவு செய்யப்பட்ட  போதிலும்  பெரும்பாலான ஓதுவார்களால் "அடாணா" இராகத்தில் பாடப்பட்டு வருகிறது. தமிழிசை ஆய்வாளர் வா. சு. கோமதி சங்கர ஐயர் அவர்கள் யாழ் முரீீீப்பண் என்பது அடாணா இராகத்தையே குறிக்கிறது என்பதை சிலப்பதிகாரத்தின் துணையுடன் நிறுவியுள்ளார்.  இது போன்று  பழந்தமிழ்ப் பண்கள் அனைைத்தும்  முறையான ஆய்வுகள் மூலம் வெளிவரல் வேண்டும் என்பது தமிழிசை  ஆர்வலர்களின் விருப்பமாகும்.
 
முனைவர் சிவகௌரி கிரீஷ்குமார்
(தமிழிசை  ஆய்வாளர் 
தமிழிசைக் கலைஞர்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக